தமிழ் l English
ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் ஸநாதந சாந்தி ஆச்ரமம் 

ஸ்ரீ மஹாப்பெரியவா (காஞ்சி பெரியவா) வேதத்தை ரக்ஷிப்பது முதல் கடமை எனக் கூறியிருப்பதால் அவாளுடைய விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து அவா பெயரிலேயே ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் வேத வித்யாச்ரமம் ஏற்படுத்தலாம் என உத்தேசமுள்ளது. இந்த ஆச்ரமமானது பெரியவா விருப்பப்படி ஸநாதன தர்மத்தை அனுஷ்டித்து நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது 

ஸ்ரீ மஹாப் பெரியவா கருணையால் இதுவரை செய்யப்பட்ட கைங்கர்யங்களில் சிலவற்றை தெரிவித்துக் கொள்கிறோம். 1986 இல் மிகப்பெரிய அளவில் ஸ்ரீ சீதாராம ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் பெங்களூர் பேலஸ்ஸில் நடத்தப்பட்டது. அதே இடத்தில் ஸ்ரீ அதிருத்ரம் நடத்தப்பட்டது. கண்கள் இல்லாத அனாதை ஆச்ரமத்து குழந்தைகளுக்கு உடைகள் உணவு அளிக்கப்பட்டது.

அதுபோலவே, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு ( அனாதை ஆச்ரம குழந்தைகளுக்கு) படிப்பதற்கு தேவையான சாமான்களும் உணவும் அளிக்கப்பட்டது. ஸ்ரீ பெரியவா ஜென்ம நக்ஷத்திரத்தில் வருடத்திற்கு ஒரு முறை காசி, ராமேஸ்வரம், கோவிந்தபுரம் முதலிய ஸ்தலங்களில் அன்னதானம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர தற்போது சுமார் 15 வருடங்களாக அப்பு க்ஷேத்திரமாகிய திருவானைக்கோவிலில் ஸ்ரீ பெரியவா ஜெயந்தி உத்ஸவம் 10 தினங்களுக்கு குறையாமல் நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு இருமுறை ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்ப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி ஹோமமும், ஸ்ரீ சிவராத்திரி சமயத்தில் ஸ்ரீ ருத்ர ஹோமமும் உலக நன்மையின் பொருட்டு நடக்கிறது. சுமார் 6 வருஷங்களாக நித்திய வேதபாராயணம் நடைபெறுகிறது. ஸ்ரீ பெரியவா எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் நாலு பேராக சேர்ந்து செய்யுங்கள் என்று தான் உத்தரவு கொடுப்பார். பல பேர் சேர்ந்து நல்ல காரியங்களை செய்தால் தான் சமுதாய ஒற்றுமை இருக்கும், எல்லோருக்கும் நன்மை ஏற்படும் என அபிப்ராயப்படுவார்

ஸ்ரீ மஹாப்பெரியவாளிடம் ஆழ்ந்த பக்தியும், ஆன்மிகத் தொண்டில் ஆர்வமும் உள்ள 50 வயதைக் கடந்த தம்பதிகள் (VRSமூலமாகவோ அல்லது முறைப்படி ரிடையர் ஆனவர்கள்) இந்த ஆச்ரமத்தில் தங்கி, இறைத்தொண்டில் தங்களை அர்ப்பணிக்க விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஸ்ரீ மஹாப்பெரியவா நமக்கு காட்டிக்கொடுத்த ஸநாதன தர்மத்தை நாம் அனுஷ்டிப்பதால் கலி தோஷங்களும் கஷ்டங்களும் விலகி நாம் நலம் பெறலாம். இந்த ஆச்ரமத்தை அமைக்க நீங்களும் பங்கு கொள்ளுதல் அவசியம். இதனால் நீங்களும் பங்கு பெற்று ஸ்ரீ மஹாப் பெரியவாளின் குரு கடாக்ஷத்தைப் பெற்று நலம்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

தர்மம் ஜெயிக்கட்டும், அதர்மம் அழியட்டும்.

ஒருவருக்கொருவர் அன்பு மலரட்டும், உலகிற்கு அமைதி கிடைக்கட்டும். வாழ்க பாரததேசம்.

முற்பகுதியில் 
த்யான மண்டபம் ஒரு பக்கமும், டைனிங் ஹால் ஒரு பக்கமும் அமைக்கப்பட  உள்ளது
.  
மத்திய பகுதியில்
ஓட்யாண வடிவில் சன்னிதிகள் இருக்கும். ஸ்ரீ அன்னை பராஷக்தி , ஸ்ரீ சக்ர வடிவில் பிரதிஷ்டை. அன்னையின் இருபுறமும் ஸ்ரீ கணேசரும், ஸ்ரீ முருகனும் பிரதிஷ்டை. இதை அடுத்து ஒருபுறம் ஸ்ரீ வேதவ்யாஸர், மறுப்புறம் ஸ்ரீ ஆதிசங்கரர் . இதன் பிறகு காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சந்திரஹேகரேந்த்ர  சரஸ்வதி ஸ்வாமிகளின் சன்னதி ஒருபுறம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
 
மத்திய பாகத்தின் பின்பகுதியில் 
ரிஷிகளுடைய ஆஸ்ரமங்கள் (பர்ண சாலை ) 15 - ல் இருந்து 20 வரை

கடை பகுதியில் 
கோசாலை 

ஷ்ரத்தா பக்தி ஸமன்வித
இந்த ஆஸ்ரமத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஷ்ரத்தை , பக்தி , நேர்மை அவசியம் தேவை 

பர்ணசாலை விவரம் 
ஒவ்வொரு ரிஷி கோத்ரக்காரர்களும் ஒரு தொகையை கட்டினால், வருடத்திற்கு 10 தினங்கள் அந்த பர்ணசாலையில் தங்கி காவேரி ஸ்நானம் செய்து காயத்ரி ஜபம் செய்யலாம் .ஸ்ரீமத்  ராமாயணம் , பாகவதம் போன்ற புராணங்கள் , பாராயணம் செய்து அமைதி பெறலாம் .  அவர்களுக்கான சாப்பாடு முதல் எல்லாம் வசதிகளும்  ஆஸ்ரமத்தில் இலவசமாக செய்து தரப்படும் . அவரவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் அதன் வரிசையில்  ஆஸ்ரமம் தரப்படும் . சிறிய வயது தம்பதிகள் அங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை . சிறிய வயது ஸ்த்ரீகளும் (பெண்மணிகளும் ) அங்கு தங்க அனுமதி இல்லை.

த்யான ஹாலை ஒட்டி ஆபீஸ் ரூம் , சின்ன லைப்ரரி இருக்கும் . தோட்டத்தை சுற்றி பெஞ்சுகள் அமைக்கப்படுவதால் பக்தர்கள் உட்கார்ந்து பாராயணம் செய்ய வசதியாக இருக்கும். 

கிடைத்தற்கரிய இந்த அரிய சந்தர்ப்பத்தை ஆன்மீக மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் உங்களது ஆர்வமும் , ஒத்துழைப்பும் தீவிரமாக  செயல்பட்டால் ,ஆஸ்ரமமானது ஒரு வருடத்திற்குள் தயாராகிவிடும் . இதன் கட்டுமான திட்ட  மதிப்பீடு சுமார் ரூ 2,00,00,000 /- (ரூபாய் இரண்டு கோடி ) ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிக்கு தங்களால் இயன்ற பண உதவியும் , பொருளுதவியும் ( செங்கல், மணல், சிமெண்ட் , கிரில் போன்றவைகள் ) யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவியருக்கு இலவச கல்வி மேலும் நன்நெறி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது அதே போன்று வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருந்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றும் வீணாவதில்லை ஆஸ்ரமப் பணி விரைவில் நிறைவேற ஒத்துழைக்கும்படி  கேட்டுக்கொள்கிறோம் 
தர்மம் ஜெயிக்கட்டும் !
ஒருவருக்கொருவர் அன்பு மலரட்டும் !!
உலகிற்கு கல்யாணம் உண்டாகட்டும் !!!
ஜய ஜய ஷங்கர       ஹர  ஹர ஷங்கர